செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் -போலீசார் விசாரணைகலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள்- போலீசார் விசாரணை

கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் -போலீசார் விசாரணைகலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள்- போலீசார் விசாரணை

1 minutes read

பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரிக்கு கலாபவன் மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன் மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் தம்பி ராதாகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கலாபவன்மணி உடல் திருச்சூர் மற்றும் சாலக்குடியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு இன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல் சேனத்துநாட்டில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

கலாபவன்மணியின் பெற்றோர் ராமன் – அம்மினி ஆவர். கலாபவன் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லெட்சுமி சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

நடிகர் கலாபவன் மணி கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் பிடிப்பு உள்ளவர். இதனால் அவரை வருகிற சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் களம் இறக்க அந்த கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கலாபவன் மணி மரணத்தை தழுவிவிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.