செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடல் பகுதியில் அகதிகள் கண்காணிப்பை விரிவுபடுத்த நேட்டோ முடிவுகடல் பகுதியில் அகதிகள் கண்காணிப்பை விரிவுபடுத்த நேட்டோ முடிவு

கடல் பகுதியில் அகதிகள் கண்காணிப்பை விரிவுபடுத்த நேட்டோ முடிவுகடல் பகுதியில் அகதிகள் கண்காணிப்பை விரிவுபடுத்த நேட்டோ முடிவு

1 minutes read

போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்புப் பணிகளை கிரீஸ், துருக்கி நாடுகளையொட்டிய ஏஜியன் கடல் பகுதியிலும் விரிவுபடுத்த நேட்டோ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறியதாவது:
எங்களது கடல் கண்காணிப்புப் பணிகளை ஏஜியன் கடல் பகுதியிலும் விரிவுபடுத்தவிருக்கிறோம்.
அந்தப் பகுதியில் அகதிகளை ஏற்றி வரும் படகுகளின் நடமாட்டம் குறித்து துருக்கி, கிரீஸ் நாடுகளின் அரசுகளுடனும், ஐரோப்பிய எல்லை விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் “ஃபிரன்டெக்ஸ்’ அமைப்புடனும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வோம்.
அகதிகள் விவகாரத்தை துருக்கி, கிரீஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் திறம்படக் கையாள்வதற்கும், சட்ட விரோதமாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் அந்தத் தகவல்கள் உதவிகரமாக இருக்கும் என்றார் அவர்.
நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளையொட்டிய ஏஜியன் கடல் பகுதிதான், போரால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் இராக்கிலிருந்து ஐரோப்பாவுக்குள் அகதிகளை கடத்திச் செல்வதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.