அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சேக்ரா மெண்டோ பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அவள் துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டுக் கொண்டாள்.
‘டமார்’ என வெடிச்சத்தம் கேட்டதும் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவளது தாயார் ஓடி வந்தார். அங்கு சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள். தற்போது அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிறுமிக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என போலீசார் விசாரித்து வருகின்றனர்.