ஏப்ரல் மாதம் வந்தால் தேர்தல் களம் சூடுபிடித்துவிடும். அதனால் அந்தக் காலகட்டத்துக்கு முன்பு படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் ஆர்வமாக உள்ளது.
வெள்ளியன்று (பிப்ரவரி 11) ஆறு படங்கள் வெளியாக உள்ளன.
காதலும் கடந்து போகும் (காகபோ), அவியல், என்னை புடிச்சிருக்கா, கோடை மழை, மாப்ள சிங்கம், நட்பதிகாரம் என ஆறு படங்கள் அன்றைய தினம் வெளியாகின்றன.
இதில் விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய காகபோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நானும் ரெளடிதான், சேதுபதி என இரண்டு ஹிட் படங்களுக்குப் பிறகு வெளிவரும் விஜய் சேதுபதியின் படம் என்பதால் ஹாட்ரிக் வெற்றியை அவர் தொடுவாரா என்கிற ஆவல் உருவாகியுள்ளது. 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.