ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பிறகு தெலுங்கானா உதயமானது. ஆந்திர – தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் பொது தலைநகராக ஐதராபாத் இருந்து வருகிறது.
ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதி உருவாக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதற்காக பூமிபூஜையும் நடத்தப்பட்டது. தலைநகர் அமராவதி மிகவும் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் ஆந்திரா அரசின் சுற்றுலாதுறையை மேம்படுத்த முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதற்காக ஆந்திரா சுற்றுலா துறையின் தூதுவர்களாக பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான அஜய்தேவ்கன் – கஜோல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அஜய்தேவ்கனிடம் சந்திரபாபுநாயுடு பேசினார். உடனே அஜய் தேவ்கன் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து விஜயவாடா வந்த அஜய்தேவ்கன் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நினைவு பரிசை சந்திரபாபுநாயுடு வழங்கினார்.