வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம்தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை கடந்த மாதம் அடுத்தடுத்து பரிசோதித்தது.
எதிரி நாடுகளின் போர் விமானங்களை தாக்கி அழிக்கும் நவீனரக ராக்கெட்களை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில்
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மறைந்த கிம் இல் சுங்-கின் பிறந்தநாள் இன்று (15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ஏவுகணை சோதனைகளுடன் தீபாவளிபோல் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
அவ்வகையில், இன்று வடகொரியா பரிசோதித்த ஏவுகணை தோல்வியை சந்தித்ததாக தென்கொரியா உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.