செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்யம் தீர்மானம்

பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்யம் தீர்மானம்

1 minutes read

பிரேசிலில், ஊழல் புகாருக்கு ஆளான அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்,அந்நாட்டு பார்லிமென்டில், நிறைவேறியது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 2011 முதல், டில்மா ரூசெப், 68, அதிபராக இருந்து வருகிறார்.

நாட்டின் பொருளாதார பாதிப்பை மறைப்பதற்காக, விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, அவர் மீது புகார் எழுந்தது. அதுபோலவே, அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் ஊழல் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு எதிராக, அந்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர் பதவியை பறிப்பதற்காக, பார்லிமென்ட், கீழவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது, அதிபரின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதன்பின் நடந்த ஓட்டெடுப்பில், 512 எம்.பி.,க்களை உடைய சபையில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக, 367 பேர், தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அடுத்த கட்டமாக, பார்லிமென்டின், செனட் சபைக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது ஏற்கப்பட்டால், அவர் உடனடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அப்போது, துணை அதிபர் மிக்கேல் டெமர், அதிபராக பொறுப்பேற்பார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.