சிறந்த குணசித்திர நடிப்பிற்கான தேசிய விருதை வென்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘விடியும் காத்திரு’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஆர். அரவிந்த ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடியும் காத்திரு’ திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் , அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீதா, ராகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி .சத்யா இசையமைந்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி எம் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பூட்டப்பட்டிருக்கும் பூட்டிற்குள் திகிலுடன் காத்திருக்கும் காவலரின் தோற்றம் இடம் பிடித்திருப்பதால்… ரசிகைகளின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,” கொலை நடந்த சம்பவ வீட்டில் விசாரணைக்காக செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு ஏற்படும் அமானுஷ்யமான சம்பவங்களின் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை கிரைம் திரில்லர் ஜேனரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு வித்தியாசமான பரபரப்பான அனுபவத்தை வழங்கும்” என்றார்.