பிரிட்டனின் மகாராணியாக மிக நீண்டகாலமாக இருந்துவரும் எலிசபெத் அரசி தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி விண்டஸரில் அவர் எடின்பரோ கோமகனுடன் நடந்து செல்லும்போது, பொதுமக்களை சந்தித்தார். பின்னர் பிரிட்டனை மிக நீண்ட காலமாக ஆட்சி செய்துவரும் அரசியார், நாடுமுழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படவுள்ள ஆயிரம் ஒளிவிளக்குகளில் முதலாவதை ஏற்றினார்.
பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அரசி பறையை போன்று வலுவானவர் என்று புகழ்ந்து பேசினார். கடந்த 64 ஆண்டுகளுக்கு அதிகமாக அவர் பிரிட்டனின் அரசியாக உள்ளார்.