செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்

சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்

0 minutes read

சீன அதிபராக ஜின்பிங் உள்ளார். சமீப காலங்களில் சீனாவில் எந்தவொரு அதிபரும் பெற்றிராத அளவுக்கு ஜின் பிங் கூடுதல் அதிகாரங்களை பெற்று உள்ளார்.

சீன அதிபர், சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர், தேசிய பாதகாப்பு கவுன்சிலின் தலைவர் ஆகிய பொறுப்புகளுடன், இப்போது அவர் நாட்டின் வலிமை வாய்ந்த ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை ஏற்றுள்ளார். இதனால் ராணுவத்தில் அவர் நேரடி தொடர்பை வைத்திருப்பார். இது தொடர்பான தகவல்கள் சீன ஊடகங்களில் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் அவர் ராணுவ உடை அணிந்து காணப்பட்ட படங்களும் வெளியாகி உள்ளன.

ராணுவ தலைமையகத்துக்கு சென்ற ஜின்பிங், உலக அளவிலான ராணுவ நவீனமயத்தை பின்பற்றும்படி படையினரை கேட்டுக்கொண்டார்.

அதிகாரிகள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு, புதுமையாகவும், கடினமான நிலைகளை சமாளித்து வெற்றி காண்பதற்கேற்ற வகையிலும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.