பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர். கேரள மாநில தேர்தல் பிரசார செயலாளராக பா.ஜ.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக நேற்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சுரேஷ் கோபி இது குறித்து கூறுகையில், எம்.பி. பதவியை பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அளித்த பரிசாக கருதுகிறேன்.
கலைத்துறை பிரிவில் எனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் எதுவும் இல்லை. கேரள மாநிலத்தில் உள்ள நதிகளை பாதுகாப்பதே என்னுடைய முதல் பணியாகும். பா.ஜ.க.வுக்காக 140 தொகுதியிலும் நான் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன் என்றார்.