செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இசைஞானியின் ஆசியுடன் ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

இசைஞானியின் ஆசியுடன் ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

1 minutes read

புதுமுக கலைஞர்கள் நந்து, ஆராதனா பட், ஸ்ரீ சத்யா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் தொடக்க விழா பாரம்பரிய படப்பிடிப்பு நிகழ்வுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பாணர் இயக்கத்தில் உருவாகும் ‘ராவணன் சோலையில் சிவன்மலை’ திரைப்படத்தில் நந்து, ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, ‘தலைவாசல்’ விஜய், கஞ்சா கருப்பு, ஜானகி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ஆர் எஸ் குளோபல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. ஸ்ரீதர் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவருடைய ஆசியுடன் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாரம்பரியமான படப்பிடிப்பு தொடங்கியது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.