தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடத்தில் பிரபலமான நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் விஜயின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத்ராஜ் , சிவ பண்டிட், அன்பு தாசன், மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் எக்சன் ரசிகர்களுக்கு அற்புதமான திரை விருந்தாக இருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்கும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனையும் படைத்து வருகிறது.