செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள் | லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம்தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள் | லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம்

தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள் | லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம்தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள் | லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையம்

1 minutes read

லண்டனில் உள்ள ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெசிக்கா கோக்லி என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

பெண்ணின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒருபாட்டிலில் சுமார் 14.8 லிட்டர் அளவுள்ள தாய்ப்பால் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை செய்தபோது, ‘நான் மற்றொரு நகரில் பணி செய்து வருகிறேன். இரண்டு கிழமைக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு திரும்புவேன். இந்த இரண்டு கிழமைக்கு தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால், அதனை பத்திரமாக சேமித்து தற்போது எடுத்துச் செல்கிறேன்’என அதிகாரிகளுடன் கூறியுள்ளார்.

ஆனால்,விமான நிலையத்திற்குள் 100 மில்லி லிட்டர் அளவுள்ள திரவ நிலை பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி உள்ளது. இதற்கு மேலாக தாய்ப்பாலை கொண்டு செல்ல வேண்டுமானால்,தாயாருடன் குழந்தையும் பயணம் செய்ய வேண்டும்.

ஆனால்,ஜெசிக்கா பயணம் செய்தபோது அவருடன் குழந்தை இல்லை என்பதால், ஒட்டுமொத்த தாய்ப்பாலையும் விமான நிலைய அதிகாரிகள் அபகரித்துள்ளனர்.பால் முழுவதையும் கீழே கொட்டி அழிக்க கட்டாயப்படுத்தினர். அதை தொடர்ந்து அவர் தான் எடுத்து வந்த தாய்ப் பாலை கீழே கொட்டினார்.

இது குறித்து ஜெசிக்கா கூறுகிஅயில் , ‘குழந்தைக்காக தாய்ப்பாலை சேகரித்து கொண்டு சென்றதை தடுத்திநிறுத்தி அபகரித்துள்ளதன் மூலம், என் குழந்தைக்கு உணவு அளிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

இது மிகவும் மோசமான பாவச்செயல். இந்த நடவடிக்கை மூலம் ஒரு தாயாரான என்னை விமானநிலைய அதிகாரிகள் அவமதித்து விட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து வழக்கு தொடரவது குறித்துஆலோசனை செய்து வருவதாக ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு லண்டன் விமான நிலையத்திற்கு திரவ வடிவில் தீவிரவாதி ஒருவன் வெடி குண்டு வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததை தொடர்ந்து, இந்த கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.