செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா எதிரிகளுக்கு வாய்ப்பளிக்காமல் பாதுகாப்பை உறுதிசெய்தோம் – குண்டுவீச்சு விமானங்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து டிரம்ப்

எதிரிகளுக்கு வாய்ப்பளிக்காமல் பாதுகாப்பை உறுதிசெய்தோம் – குண்டுவீச்சு விமானங்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து டிரம்ப்

1 minutes read

இங்கிலாந்தில் உள்ள RAF ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) விமான தளத்திலிருந்து அமெரிக்கா தனது B-1 குண்டுவீச்சு விமானங்களை திரும்பப் பெற்றுள்ளது.

இத்தளத்திற்கு ஏற்பட்ட “குறிப்பிட்ட அச்சுறுத்தல்” காரணமாகவே விமானங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். எதிரிகளுக்கு வாய்ப்பளிக்காமல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி RAF ஃபேர்ஃபோர்ட் விமான தளத்துக்கு அருகே மூன்று சந்தேகத்துக்குரிய வாகனங்கள் காணப்பட்டமை தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ட்ரோன் தாக்குதல்கள் அல்லது சதித்திட்டங்கள் மூலம் விமானங்களை தாக்க ஈரான் திட்டமிட்டிருக்கலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் திரும்பப் பெறப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கலாம் என்று இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டிய போதிலும், ஈரான் தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் இருந்து அனைத்து குண்டுவீச்சு விமானங்களையும் அமெரிக்கா மீளப்பெற்றது!

இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, இங்கிலாந்து -ஈரான் இரட்டை குடியுரிமை பெற்ற ஆறாவது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாகவே விமானங்கள் மாற்றப்பட்டதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இராணுவ தளவாடங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது ஒரு சாதாரண வழக்கமான நடவடிக்கை என்றும், இங்கிலாந்து தளங்களின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

RAF ஃபேர்ஃபோர்ட் தளம் பல தசாப்தங்களாக அமெரிக்க விமானப் படையின் முக்கிய பயன்பாட்டுத் தளமாக இருந்து வருகிறது. ஈரானுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல்களுக்காக B-1 மற்றும் B-52 குண்டுவீச்சு விமானங்கள் இத்தளத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன.

தற்போது விமானங்கள் வெளியேற்றப்பட்டதன் மூலம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் உடனடி வான்வழித் தாக்குதல் திறன் சற்று குறைய வாய்ப்புள்ளதாக பாதுகாப்புப் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.