முதல் முறையாக உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதி நிலைமை பற்றி விவாதிக்கும் கூட்டம் கலிபோர்னியாவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் “இந்தியாவை மட்டும் எடுத்துக்கொண்டால், நாங்கள்(ஆப்பிள்) 56 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் எங்களின் விற்பனை குறைந்துள்ளது.
இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் குறைந்த வசதிகள் கொண்டவையாகவும், ஆரம்ப கட்ட போன்களாகவும் உள்ளது. இதற்கு நெட்வொர்க் மற்றும் பொருளாதாரம் தான் காரணம். இந்தியாவில் சந்தை மதிப்பு குறைவுதான். என்னை பொறுத்தவரை தற்போது இந்தியா, 7 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் சீனா இருந்த நிலையில் உள்ளது. ஆனால், அங்கு சந்தை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.