விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘தெறி’. இப்படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளையில் இருக்கும் 60 குழந்தைகள் ‘தெறி’ படத்தை பார்க்க விரும்பினர். உடனே விஜய்க்கு போன் செய்து பேசிய லாரன்ஸ், குழந்தைகள் படத்தை பார்க்க பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். படத்தை பார்த்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
‘குழந்தைகளை படம் பார்க்க வைத்து மகிழ்ச்சியடைய வைத்த என்னுடைய நண்பர் விஜய்க்கு மிகவும் நன்றி‘ என்று லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் மகேந்திரன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.