செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் திருச்சியில் “மகாகவி ஹைக்கூ விருது” வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது

திருச்சியில் “மகாகவி ஹைக்கூ விருது” வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது

1 minutes read

திருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் ஒருங்கிணைப்பில், மகாகவி இதழ் நடத்திய மகாகவி ஹைக்கூ விருது 2026 வழங்கும் விழா, 10-10-2026 அன்று மாலை திருச்சி சுருதி மகாவில் சிறப்பாக நடைபெற்றது.

10-10-2026 அன்று மாலை திருச்சி சுருதி மஹாலில் சிரா இலக்கியக்கழக தலைவர் கேத்தரீன் ஆரோக்கியசாமி தலைமையில். கவிஞர் நா.வே. அருள், பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு நிறுவனத் தலைவர் திருவை பாபு, தென்னங்கூர் கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் உ. பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மகாகவி இதழாசிரியர் வதிலைபிரபா நோக்கவுரையாற்றினார். முன்னதாக தூயவளனார் கல்லூரி தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் சி. பாக்கிய செல்வ ரதி வரவேற்றார்.

தொடர்ந்து ஆசா கல்வி சமூக அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் ஆரிசன் வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க கெளரவத் தலைவர் கல்வியாளர், சௌமா விருதுகள் புகழ் செளமா இராஜரெத்தினம் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

பெருமைமிக்க மகாகவி ஹைக்கூ விருதுகள்

பொ.செந்திலரசு, (மலரத் துடிக்கும் சாக்ய நெருஞ்சி)

மா.காளிதாஸ்,( பறவை தூக்கிச் செல்லும் இருள்)

கன்னிக்கோயில் ராஜா ( யோசா பூசனின் காகங்கள்)

மூவருக்கும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதாளருக்கும் பொன்னாடை, சந்தனமாலை, சான்றிதழ், ஷீல்டு மற்றும் ₹5000 பரிசு வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற நூல்களை மகாகவி இணை ஆசிரியர்கள் முனைவர் ஜோ.பிரேமா கிறிஸ்டி, கவிஞர் ம. திருவள்ளுவர் இருவரும் ஆய்வுரை நிகழ்த்தினர்.

இனிய நந்தவனம் இதழாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் கவிஞர் முபாரக், மேனாள் மகாகவி துணை ஆசிரியர் ரமேஷ் பிரபாகர், திருவை குமரன், விஞர் சேது மாதவன் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அரிமா முகமது சபி மகாகவி ஆசிரியர் குழுவினருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.

பின்னர் காவிரிக் கவித்தமிழ் முற்றம் செயல் இயக்குநர் டயானா நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

மகாகவி இணையாசிரியர் முனைவர் ஜா.சலேத் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தது அனைவரின் பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வின் மிக முக்கியத் தருணமாக மகாகவி வெளியிட்ட கவிஞர் சிற்பி சிறப்பிதழை புரவலர் செளமா இராஜரெத்தினம் வெளியிட அரிமா முகமது சபி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு மகாகவி இதழின் அடுத்தகட்ட நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கவிஞர் ஆரிசனின் ஆசா கல்வி சமூக அறக்கட்டளை விருத்தாளர்களுக்கான பரிசுத் தொகையை ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து இம்முன்னெடுப்பை மகாகவி இதழும், ஆசா கல்வி சமூக அறக்கட்டளையும் இணைந்து செயல்படுத்தும்.

ஒரு நிகழ்ச்சியின் அத்தனை வெற்றிக்கும் காரணம் திருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் என்றால் மிகையில்லை. முனைவர் ஜா. சலேத் -மெர்சி டயானா இருவருக்கும் பாராட்டும் வாழ்த்தும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.