செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பர்ன்ஹாம் – ஜெலென்ஸ்கி சந்திப்பு: உக்ரைனுக்கு விரைவாக ஏவுகணைகளை வழங்கவுள்ள இங்கிலாந்து!

பர்ன்ஹாம் – ஜெலென்ஸ்கி சந்திப்பு: உக்ரைனுக்கு விரைவாக ஏவுகணைகளை வழங்கவுள்ள இங்கிலாந்து!

1 minutes read

இங்கிலாந்து பிரதமர் அண்டி பர்ன்ஹாம் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று, இன்று புதன்கிழமை (14) டவுனிங் வீதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, உக்ரைனின் தலைநகர் கீவ்விற்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை துரிதமாக வழங்குவது தொடர்பான புதிய அறிவிப்பை இங்கிலாந்து உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

அத்துடன், ரஷ்யாவுக்கு எதிராக மேலதிக தடைகளை அமுல்படுத்துவது தொடர்பான திட்டங்களையும் இங்கிலாந்து அரசாங்கம் இச்சந்திப்பின் போது முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்புக்கு முன்னதாக கருத்து வெளியிட்ட பிரதமர் பர்ன்ஹாம், தேவையான காலம் வரை உக்ரைனுடன் இங்கிலாந்து துணைநிற்கும் என்றும், ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு வெற்றியடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தங்களை தீவிரப்படுத்துமாறு நட்பு நாடுகளிடம் இங்கிலாந்து கோரவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் பங்கேற்கும் இங்கிலாந்து நிதி அமைச்சர் ஜோன் ஹீலி, ரஷ்யாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு (LNG) சர்வதேச தடை விதிக்குமாறு வலியுறுத்தவுள்ளார்.

அண்டி பர்ன்ஹாம் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் உக்ரைன் ஜனாதிபதி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர் ஜூலை மாத இறுதியில் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் இரு தலைவர்களும் சந்தித்து படைகளை பார்வையிட்டதுடன், கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்தியிருந்தனர்.

உக்ரைனுக்கு வழங்கும் உறுதியான ஆதரவு இங்கிலாந்தின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது எனத் தெரிவித்த பிரதமர், உக்ரைன் மக்களின் தைரியமான போராட்டத்துக்கு ஆதரவாக இங்கிலாந்து மேலும் வேகமாகவும் தீவிரமாகவும் செயற்படும் எனவும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.