செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் | சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் | சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2 minutes read

‘அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் இராஜினாமாவை ஏற்று பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் பிறப்பித்த உத்தரவு செல்லும்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசிற்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குபற்றி வாக்களித்தனர். இதனால் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அதிமுக சார்பில் பேரவை தலைவரிடம்  மனு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மரகதம் குமரவேல் – மதுராந்தகம், சத்தியபாமா – தாராபுரம், இசக்கி சுப்பையா -அம்பாசமுத்திரம், ஜெயகுமார் – பெருந்துறை, ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை பேரவை தலைவரான ஜே சி டி பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கொறடா உத்தரவை மீறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் – மரகதம் குமரவேல், தாராபுரம்- சத்தியபாமா, அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா, பெருந்துறை – ஜெயக்குமார், கரூர் – எம். ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை -சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, இந்த நான்கு பேரின் ராஜினாமாவை சட்டப்பரைப் பேரவை தலைவர் ஏற்றுக்கொண்டது சட்ட விரோதமானது எனக்கூறி, அதிமுக கட்சியின் கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர்களது புகாரில் ‘ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு பேரவை தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம். எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் எஸ். ஏ. தர்மதிகாரி- நீதியரசர் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் சட்டப்பேரவை தலைவரின் தரப்பு விளக்கத்தையும்… சட்டப்பேரவை செயலாளர் தரப்பின் விளக்கத்தையும்.. மற்றும் அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்.. இந்த வழக்குகளின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ” ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை பேரவை தலைவர் ஏற்றது சரிதான். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால்.. ராஜினாமாவை ஏற்க தடை இல்லை. அதனால் ராஜினாமாவை ஏற்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகும்” என உத்தரவிட்டுள்ளனர். மேலும் ‘தகுதி நீக்க நடவடிக்கை பற்றிய முடிவை பேரவை தலைவர் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் நீதியரசர்கள் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவால் அரசியல் ரீதியாக அதிமுகவிற்கு மேலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் விவரித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.