செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் சசிகுமார் வெளியிட்ட நடிகர் சரணின் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ படத்தின் டீசர்

நடிகர் சசிகுமார் வெளியிட்ட நடிகர் சரணின் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ படத்தின் டீசர்

1 minutes read

நடிகர் சரண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் த. சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ திரைப்படத்தில் சரண், ஜேடி சக்கரவர்த்தி, லால், ஸ்மேகா, ராதிகா சரத்குமார், சாதிக், காளி வெங்கட், பால சரவணன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கா. வின். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் டேனியல் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவிற்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் தங்க கடத்தல் தொடர்பான காட்சிகள் பரபரப்பாகவும்… விறுவிறுப்பாகவும்… எக்சன் ரசிகர்களுக்கு ஏற்ற திரை விருந்தாகவும் உருவாகி இருப்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.