செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

1 minutes read

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை விட்டு விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, அண்மையில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி எதிர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிப்பேராணை (ரிட்) மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் அமைந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

அங்கு கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசாங்கம் பறித்து வருவதாகவும், அதனைத் தடுத்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். இது பல்வேறு தளங்களிலான போராட்டமாக அன்றி, ஒரே இலக்கைக் கொண்ட ஒற்றைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுவதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டுடன் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமது கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை இப்போராட்டம் ஓயாது எனவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.