செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு விலக்க கடும் எதிர்ப்புராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு விலக்க கடும் எதிர்ப்பு

ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு விலக்க கடும் எதிர்ப்புராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு விலக்க கடும் எதிர்ப்பு

1 minutes read

இலங்கையில் உள்ள தலைவர்களுக்கு இதற்கு முன்பு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் அவர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் இல்லாததால் அனை வருக்கும் ராணுவ பாதுகாப்பை விலக்கிவிட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட இருக்கிறது. இன்றுடன் இந்த பாதுகாப்பை விலக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு ராஜபக்சே தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக அவரது ஆதரவு எம்.பி. பந்துல குணவர்த்தனே கூறியதாவது:-

ராஜபக்சே உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. தமிழ் போராளிகளால் அவருடைய உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என கருதுகிறோம். எனவே ராஜபக்சேவுக்கு தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மற்றவர்களுக்கு எந்த வகை பாதுகாப்பு கொடுத்தாலும் ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பு தான் சரி யானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.