செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரஷ்யாவின் டிஜிட்டல் போருக்கு சமூக ஊடகங்கள் கூட்டாளி: போலந்து பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யாவின் டிஜிட்டல் போருக்கு சமூக ஊடகங்கள் கூட்டாளி: போலந்து பகிரங்க குற்றச்சாட்டு

1 minutes read

ரஷ்யாவுடனான டிஜிட்டல் போரில் அந்நாட்டின் அமைதியான கூட்டாளிகளாகச் சமூக ஊடகங்கள் செயற்படுவதுடன், தவறான தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் அவை முன்னெடுக்கவில்லை எனப் போலந்து குற்றஞ்சாட்டியுள்ளது.

போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சர் க்ஷிஷ்டோஃப் காவ்கோவ்ஸ்கி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் கோரிக்கைகளைப் புறக்கணித்துச் செயற்படும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ரஷ்யாவுடன் தற்போது ஒரு டிஜிட்டல் போர் இடம்பெற்று வருவதாகவும், இந்தப் போரில் தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு முனையும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த முன்னணியில், ரஷ்யாவின் போட்கள் மற்றும் கிரெம்ளினின் உளவு அமைப்பான ஜி.ஆர்.யூ. ஆகியவற்றிற்கு அமைதியான கூட்டாளியாகவே சமூக ஊடகங்கள் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

போலந்து உட்பட்ட மேற்கத்திய நாடுகளில் சமூக ரீதியான பிளவுகளை ஏற்படுத்தவும், அமைதியைக் குலைக்கவும் ரஷ்யா திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகப் பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள மொஸ்கோ நிர்வாகம், மேற்கத்திய தலைவர்கள் தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காகவே ரஷ்யாவினால் ஏற்படும் அச்சுறுத்தலை வேண்டுமென்றே மிகைப்படுத்திக் காட்டுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.