செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

1 minutes read

அய்ச்சி – நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் வெள்ளிக்கிழமை (23) இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.

மாற்றுத்திறனாளிகளான ப்ரதீப் சோமசிறி, ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க ஆகியோர் இன்று காலை போட்டி சாதனைகளுடன் வென்றெடுத்த தங்கப் பதக்கங்களைத்  தொடர்ந்து இன்று மாலை மேலும் ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.

இலங்கைக்கு பதக்கம் ஒன்றை வென்றுகொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு துரதிர்ஷ்டவமாக நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இன்று மாலை நடைபெற்ற T44 வகை பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.58 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை மாற்றுத்திறனாளி நுவன் இந்திக்க கமகே வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

அப் போட்டியில் சவூதி அரேபியாவின் மாற்றுத்திறனாளி நய்ப் அல்மார்ஷி 11.15 செக்கன்களில் ஓடி முடித்து போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

T63 வகைப் பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 13.39 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை மாற்றுத்திறனாளி சரித்த புத்திக்க இந்த்ரபால வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

F42-F44/61-F64 வகைப் பிரிவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு (F44  வகைப் பிரிவு) 64.10 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ராஸா புள்ளிகள் அடிப்படையில் நான்காம் இடத்தைப் பெற்றார்.

அப் போட்டியில் F42-F44/F61-F64 ஆகிய வெவ்வேறு வகைப் பிரிவுகளின் கீழ் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட்டதால் தூரப்பெறுதிகளுடன் ராஸா புள்ளிகள் முறைமை பிரகாரம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவது போட்டி விதிகளாகும்.

அப்போட்டியில் சமித்த துலானின் தூரப் பெறுதி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

எனினும் அதிக ஊனமுற்ற ஒரு மாற்றுத்திறனாளி குறைந்த ஊனமுற்ற போட்டியாளரைவிட சற்று குறைந்த தூரம் எறிந்து அல்லது தாண்டி  ராஸா புள்ளிகள் முறைமை பிரகாரம்    வெற்றிபெறலாம்.

இதற்கு அமைய இந்தியாவின் மாற்றுத்திறனாளிகள் மூவர் முதல் மூன்று இடங்களைப் பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

இதில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மாற்றுத்திறனாளி மஹேந்த்ரா குர்ஜார் மூன்றாம், நான்காம் இடங்களைப் பெற்றவர்களைவிட குறைந்த தூரத்திற்கே ஈட்டியை எறிந்திருந்தார். எனினும் அவர் மற்றையவர்களை விட அதிக ஊனமுற்ற வகைப் பிரிவை (F42) சேர்ந்தவர் என்பதால் ராஸா புள்ளிகள் முறைமை பிரகாரம் 1066 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

இலங்கைக்கு இன்றுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதற்கு அமைய பதக்க பட்டியலில் இடம்பெறும் 33 நாடுகளில் இலங்கை 16ஆம் இடத்தில் இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.