செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை கபாலி1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை கபாலி

1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை கபாலி1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை கபாலி

0 minutes read

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் டீசர் கடந்த மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்த டீசர், 3 நாளில் 1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது.

கபாலி படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் மலேசியா, தாய்லாந்து மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடவுள்ளனர். வருகிற ஜுன் மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.