பரஸ்பர புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பு முயற்சிகள் இலங்கை – இந்திய பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பௌத்த கலாசாரத்தை பரப்பவும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வளர்க்கவும் உதவும் என இந்தியாவின் பிரபல நடிகர் ககன் மாலிக், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவிடம் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவுக்கும், இந்தியாவின் பிரபல நடிகரும் பௌத்த ஆர்வலருமான கலாநிதி ககன் மாலிக் உட்பட ‘உலக பௌத்த அறிஞர்கள் கூட்டமைப்பின்’ பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ‘புத்தவனம் திட்டத்தின்’ விசேட அதிகாரியான பேராசிரியர் மலபல்லி லக்ஷ்மையா தலைமையிலான தூதுக்குழுவினரே இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக டில்வின் சில்வா தெரிவித்தார்.
பரஸ்பர புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இத்தகைய முயற்சிகள் இரு நாடுகளின் பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பௌத்த கலாசாரத்தை பரப்பவும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வளர்க்கவும் உதவும் என்று ககன் மாலிக் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

