செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்து சேவையின் சாரதி, நடத்துநருக்கு பணி இடைநிறுத்தல்

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்து சேவையின் சாரதி, நடத்துநருக்கு பணி இடைநிறுத்தல்

1 minutes read

முல்லைத்தீவு – கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு ஐந்து நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த  21ஆம் திகதி முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது, மதுபோதையில் பேருந்தில் ஏறிய சிலரால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் பேருந்தின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துநர் தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றத் தவறியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தமக்குரிய பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவதுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் வலியுறுத்தினார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளின்போது பயணிகள் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, சாரதிகள் அல்லது நடத்துநர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, அது தொடர்பான ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.