செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!

28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!

0 minutes read

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமான பென் வைட்,  தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 3 டெஸ்ட்,  2 ஒருநாள் மற்றும் 38 ரி20 சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும், 2021, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அயர்லாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியதே பென் வைட்டின் கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.

தனது கிரிக்கெட் பயணத்தில் அயர்லாந்து அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பளித்த கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும், சக வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் வெளியில் இருந்து அயர்லாந்து அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.