முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்ததை ஒட்டி இன்று சனிக்கிழமை (31) ) சிறப்புத் திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் இந்த 100-வது நாள் சிறப்புக்காட்சி திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் “ஒன்ஸ் மோர்” (Once More) எனக் கேட்டுக்கொண்டே இருந்ததால், தியேட்டர் நிர்வாகம் அந்த டைட்டில் கார்டை மீண்டும் மீண்டும் என 8 முறை திரையிடப்பட்டு இரகசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
படத்தின் ஆரம்ப காட்சியில், திரையில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்” (The Honourable Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay) என்ற தங்க நிற எழுத்துக்களுடன் கூடிய மாஸான டைட்டில் கார்டு தோன்றியபோது, தியேட்டரே அதிரும் வண்ணம் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.
எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த அரசியல் அதிரடித் திரைப்படம், தியேட்டர்களில் திருவிழா போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு நடிகருக்கு, அவர் நிஜ வாழ்க்கையிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது திரைப்படத்தில் ‘Honourable Chief Minister’ என்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் கார்டு போடப்பட்டது இதுவே முதல்முறையாகுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விஜய்யின் முந்தைய படங்களில் ‘இளையதளபதி’ மற்றும் ‘தளபதி விஜய்’ என்று வந்த கார்டுகளுக்கு விடை கொடுத்து, அவரது கடைசிப் படமான இதில் அரசியல் பயணத்தை கௌரவிக்கும் விதமாக இந்த புதிய டைட்டில் கார்டு சேர்க்கப்பட்டுள்ளது இரகசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.