செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 94 வருடங்களின் பின்னர் ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றி: ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர் தோல்வி

94 வருடங்களின் பின்னர் ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றி: ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர் தோல்வி

1 minutes read

அமெரிக்காவின் கேன்சஸ் மாகாணத்தில் கடந்த 94 வருடங்களில் முதற்தடவையாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வரலாற்று வெற்றியைப் பெற்று, அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவாகியுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவைப் பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஆடம் ஹாமில்டன் இந்த அபார வெற்றியை ஈட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 16 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாரம்பரிய குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கேன்சஸ் மாகாணத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்பிற்கு ஆதரவான களத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளித்து வாக்களித்துள்ளமையானது, தற்போதைய ட்ரம்பின் அரசியல் அணுகுமுறைகள் மீது வாக்காளர்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவின் மிகப்பெரிய யுனைடெட் மெதடிஸ்ட் சபையின் போதகரான ஆடம் ஹாமில்டன், வாழ்க்கைச் செலவு குறைப்பு, மலிவு விலையிலான சேவைகள் மற்றும் இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான ஆரோக்கியமான ஒத்துழைப்பு ஆகிய விடயங்களை முதன்மைப்படுத்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார்.

அதேவேளை, தன்னை ஒரு சுயேச்சையான சிந்தனை கொண்ட ஜனநாயகவாதி என அடையாளப்படுத்திய அவர், தன்னைத் தீவிர இடதுசாரி என குடியரசுக் கட்சியினர் முன்னெடுத்த பிரச்சாரங்களையும் திட்டவட்டமாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.