செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ரூ.3 இலட்சம் கோடி பெறுமதியான இராணுவத் தளவாட உற்பத்தி: இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

ரூ.3 இலட்சம் கோடி பெறுமதியான இராணுவத் தளவாட உற்பத்தி: இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

1 minutes read

இந்தியா, 2029ஆம் ஆண்டுக்குள் மூன்று இலட்சம் கோடி ரூபாய் பெறுமதியான இராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும், 50,00 கோடி ரூபாய் பெறுமதியான தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்புப் படைகளின் நவீனமயமாக்கல் தொடர்பான பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்புச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நோக்கில், நவீன தொழில்நுட்பக் கட்டமைப்புக்களுடன் கூடிய வலிமையான இராணுவத்தை கட்டியெழுப்புவதில் இந்திய மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், 2026–27ஆம் நிதியாண்டுக்கான பாதுகாப்புத் துறை வரவு – செலவுத் திட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 7.85 இலட்சம் கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது அறிவித்துள்ளார்.

நவீன போர் முறைகளில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. மேம்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களை உருவாக்குவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள விசேட படைப் பிரிவுகள், தற்போதைய கள நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகுந்த வினைத்திறனுடன் செயல்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.