செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இத்தாலிக்கு பயணிக்கும் இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

இத்தாலிக்கு பயணிக்கும் இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

1 minutes read

இத்தாலியில் தீவிரமடைந்து வரும் வன்முறைக் கலவரங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அங்கு பயணிக்கும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இங்கிலாந்து பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) விசேட பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, தேக்கமடைந்துள்ள ஊழியர் சம்பளம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கான இராணுவச் செலவினங்கள் அதிகரிக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இத்தாலியின் முக்கிய நகரங்களில் இப்போராட்டங்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக ரோம், மிலன், நேபிள்ஸ், டுரின் மற்றும் போலோக்னா உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் மக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ரோம் நகரின் கொலோசியத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதுடன், கவச வாகனங்களையும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளனர். அத்துடன் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் போராட்டக் குழுக்களுடன் இணைபவர்களுக்கு 05 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 30,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் வகையில், ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான அரசாங்கம் அவசரகால சட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி – இத்தாலியில் வெடித்த ஆர்ப்பாட்டங்கள்: கண்ணீர்ப்புகை, தடியடி பிரயோகம்; நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில்

இவ்வாறான பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இத்தாலிக்குச் செல்லும் இங்கிலாந்து பிரஜைகள் அரசியல் ரீதியான பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறும், போக்குவரத்து இடையூறுகள் தொடர்பில் உள்ளூர் ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.