செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா வந்தடைந்தனர் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்; பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்பு

இந்தியா வந்தடைந்தனர் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்; பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்பு

1 minutes read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு உள்ளிட்ட மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோர் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

புற்றுநோய் சிகிச்சைகள் காரணமாக இளவரசி கேத்தரினின் வெளிநாட்டுப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இந்த வாரம் நடைபெறவுள்ள பல நிகழ்வுகளில் அவர் தனது கணவருடன் இணைந்து கலந்துகொள்ளவுள்ளார்.

இவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள், இளவரசர் வில்லியமினால் நிறுவப்பட்ட ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) திட்டத்துடன் தொடர்புடையவையாகும். உலகின் மிகப்பெரிய காலநிலை சவால்களுக்குச் சிறந்த தீர்வுகளை வழங்கும் ஐந்து திட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் பவுண்டுகள் (£1m) வீதம் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது.

சர்வதேச அரங்கில் இளவரசர் வில்லியம் தனது பங்களிப்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தப் பயணம் மற்றொரு முக்கியமான இராஜதந்திர நகர்வாக அமைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்கள் ஊடாக இங்கிலாந்தின் இராஜதந்திர உறவுகளுக்கு அவர் தொடர்ந்து வலுச்சேர்த்து வருவதாகவும், உயர்மட்ட அளவிலான தொடர்புகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு இந்தச் சந்திப்பு வாய்ப்பளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இத்தம்பதியினர், பிரதமர் மோடியைச் சந்தித்திருந்தனர்.

இன்று திங்கட்கிழமை (16) முற்பகல் மும்பை வந்தடைந்த இளவரசர் வில்லியம், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 6 ஆண்டுகளில் எர்த்ஷாட் திட்டத்திற்கு இந்தியா அசாதாரண பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், வேறு எந்த நாட்டையும் விட அதிகளவான இறுதிப் போட்டியாளர்களையும் வெற்றியாளர்களையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சுற்றுச்சூழல், கிரிக்கெட், இளம் குடும்பங்கள் மற்றும் பொலிவூட் திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் அரச தம்பதியினர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா வந்தடைந்தனர் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்; பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்பு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.