செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லலும் சமந்தாசிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லலும் சமந்தா

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லலும் சமந்தாசிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லலும் சமந்தா

1 minutes read

சிம்புவுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய வேடத்தில் வந்தவர் சமந்தா. பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ படம் அவரை பிரபலபடுத்தியது. நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

சமந்தாவுக்கு தோல் அலர்ஜி நோய் இருந்தது. வெயில் உடம்பில் பட்டாலோ அதிக வெப்பமான இடங்களில் இருந்தாலோ இந்த தோல் அலர்ஜி அவருக்கு வந்து விடும். இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கர் டைரக்டு செய்த ஐ படங்களுக்கு சமந்தாவைத்தான் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அப்போது அவரை இந்த தோல் அலர்ஜி நோய் கடுமையாக தாக்கியது.

இதனால் அந்த இரண்டு படங்களிலும் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் வேறு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 6 மாதங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தார்.

இதன் படப்பிடிப்பில் சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் அதிக வெப்பத்தால் அலர்ஜி ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு விளக்கு வெளிச்சத்தை குறைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ஓய்வு இல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இதனால் அவருக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.

சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட இருக்கிறது. இந்த மாத இறுதியில் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் சமந்தா கூறி இருந்தார். தோல் அலர்ஜி சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.