செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டிரம்ப், ஷி ஜின்பிங் மற்றும் புடின் இடையே சீனாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு

டிரம்ப், ஷி ஜின்பிங் மற்றும் புடின் இடையே சீனாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு

1 minutes read

சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு (APEC) உச்சி மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து இவ்வாறானதொரு பிரத்தியேக முத்தரப்புச் சந்திப்பை நடத்துவது, வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

இச்சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இது முன்னோடி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், வல்லரசுகளுக்கு இடையிலான நேர்மறையான தொடர்பு ஒரு கட்டாயத் தேவை என்றும் குறிப்பிட்டார். அதேவேளை, இச்சந்திப்பு உண்மையிலேயே வரலாற்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த முத்தரப்பு மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டது.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் தம் மூவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி டிரம்ப், ஈரான் அணுஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் உலகளவில் அணுஆயுதப் பரவலைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பு, உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய விடயங்கள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

முத்தரப்பு மாநாட்டுக்கு முன்னதாக, ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்புச் சந்திப்புகளை நடத்தியிருந்தார். டிரம்பைச் சந்தித்ததன் பின்னர் புடின் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்ததாக ரஷ்யத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவுடனான அமெரிக்காவின் உறவு குறித்துக் கருத்து வெளியிட்ட டிரம்ப், வர்த்தக வரிகள் நியாயமான முறையில் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான விசேட உறவு சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.