கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு, 70 நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது அந்தத் தொகுதி காலியாகியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் களமிறங்க வேண்டுமெனக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.