செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய வெளிநாட்டவர் வெலிகமவில் கைது

அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய வெளிநாட்டவர் வெலிகமவில் கைது

0 minutes read

உரிய அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெலிகம பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை (21)  வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வணிகசிறி மாவத்தை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜை எனவும் அவர் வெலிகம பகுதியில் வதிவிட விசா அடிப்படையில் வசித்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.