செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்காக படப்பிடிப்புகள் ரத்துநடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்காக படப்பிடிப்புகள் ரத்து

நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்காக படப்பிடிப்புகள் ரத்துநடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்காக படப்பிடிப்புகள் ரத்து

1 minutes read

தமிழக சட்டமன்ற தேர்தல் 16-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன. இதுபோல் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

16-ந்தேதி வாக்குப்பதிவின்போது ஓட்டுப்போட்டு தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்ற நடிகர்-நடிகைகள் தயாராகிறார்கள்.

ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தை முடித்து விட்டு தற்போது ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். திங்கட்கிழமை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் அவர் ஓட்டுப்போடுகிறார்.

கமல்ஹாசன் சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல தயாராகிறார். திங்கட்கிழமை சென்னையில் இருந்தால் ஓட்டுப்போடுவேன் என்று அவர் கூறி உள்ளார்.

விஜய் தனது 60-வது படத்தில் பரதன் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் திங்கட்கிழமை ஓட்டுப்போட வருகிறார்.

அஜித் வேதாளம் படம் வெளியான பிறகு முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். அவரும் ஓட்டுப்போடுகிறார். விக்ரமும் ஓட்டுப்போட வருகிறார்.

நடிகர் விஷால் கத்திச்சண்டை படப்பிடிப்பில் இருக்கிறார். கண்டிப்பாக ஓட்டுப்போடுவேன் என்று அவர் கூறி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.