இங்கிலாந்தில் தமிழ் இளைஞர்களின் இசை மற்றும் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Kings of Gaana 2026’ இசைப் போட்டி, எதிர்வரும் டிசெம்பர் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெறவுள்ளது.
இந்தப் பிரம்மாண்ட இசைப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று தமது இசைத் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளதுடன், போட்டியின் இறுதியில் ஒரு அணி வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்படவுள்ளது.
University of Cambridge, City, University of London மற்றும் St George’s University of London உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களின் இசை மற்றும் மேடை நிகழ்த்துகைக் கலைகளுக்கு வாய்ப்பளிக்கும் நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.
இப்போட்டி இலண்டனின் 490 Commercial Road, London, E1 0HX என்ற முகவரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Troxy அரங்கில் நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் அணிகள், நுழைவுச்சீட்டுகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான மேலதிக விபரங்களை ‘Kings of Gaana’ அமைப்பின் உத்தியோகபூர்வ Instagram பக்கமான https://www.instagram.com/kingsofgaana ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலண்டனில் வாழும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இசை ஆர்வத்தையும் கலைத்திறமைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு ‘வணக்கம் இலண்டன்’ ஊடக அனுசரணை வழங்குகின்றது.
நுழைவுச்சீட்டுக் கட்டணங்கள்
Front Stall – £38.21
Stalls – £34.73
Circle Row A – £37.05
Circle Booth – £37.05
Circle Block – £30.09
நுழைவுச்சீட்டுகளை KINGS OF GAANA, Ticketmaster மற்றும் TROXY ஆகிய இணையத்தளங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். 