செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

1 minutes read

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளோ எடுத்துக்கொள்ளலாம் என  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசப்  பெண் ஊழியர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, குழந்தை பிறக்கும் காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரச ஊழியர் சங்கங்களிடமிருந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள்கள் தந்தையர் விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விடுப்புக் காலத்தில் மனைவிக்குத் தேவையான உடல் மற்றும் மனரீதியான ஆதரவை வழங்குவதுடன், குழந்தையின் ஆரம்பகாலப் பராமரிப்பிலும் தந்தை முழுமையாகப் பங்கேற்க முடியும்.

அரசு ஊழியர்களின் குடும்ப நலனையும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பையும் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இந்த முடிவு, அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.