2
நடிகர் ரஜினி காந்த்-லதா தம்பதியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சவுந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், ரஜினிகாந்த் குடும்பத்தினர் இது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், சவுந்தர்யா ரஜினி காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:- ” எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த ஒரு வருடமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. எனது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.