நாட்டு மருத்துவரும், அறிவியலாளருமான, எட்வர்ட் ஜென்னர், இங்கிலாந்து நாட்டின், பெர்க்லி என்ற நகரில், 1749- மே, 17ல் பிறந்தார். செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில், 1792-ல், மருத்துவ பட்டம் பெற்றார். அம்மை நோய் பரவ காரணம் என்ன என்பது குறித்து, ஆய்வு மேற்கொண்டார். அதை, 1798-ல், நுாலாக வெளியிட்டார். இயற்கையை அளவில்லாமல் நேசித்த, ஜென்னர், அம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்தார். ஆனால், அதற்கான காப்புரிமை பெற நினைக்காமல், அதை உலகிற்கு இலவசமாக வழங்கினார்.
அவரை பாராட்டி, பிரிட்டிஷ் பார்லிமென்ட், 1802ல், 10 ஆயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து, அவருக்கு மேலும், 20 ஆயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதை பயன்படுத்தி, 1808ல், தேசிய தடுப்பூசி கழகத்தை தோற்றுவித்தார். உலகில் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக, 1980ல், உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. எட்வர்ட் ஜென்னர், 1823- ஜன., 26ல் காலமானார். அவர், இறந்த தினம் இன்று.
9