தாயகத்தின் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றிய குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்றையதினம் 09.04.2018 சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
தென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகிய இவரது பயணத்தில் மிகச்சிறந்த தொழிநுட்பவியலாளனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
நீண்ட போராட்ட வரலாற்று ஆவணங்களை பாதுகாத்த ஒருவராக, சிறந்த தொழிநுட்பவியலாளராக, ஆசிரியராக இவரது பரிமாணங்களை வரலாற்றுடன் பதிந்துள்ளன.