டெல்லியில் இன்று நடைபெற்ற 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஸ்ரீதேவிக்கான விருதை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கே.யேசுதாஸ், ஸ்ரீதேவி குடும்பத்தினர், வினோத் கண்ணா குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய விருதை வழங்கினார். மாம் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.