செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உரிய நேரத்தில் நிரூபிப்போம்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உரிய நேரத்தில் நிரூபிப்போம்

1 minutes read

பொதுத்தேர்தலை கோரி, பெவிதி ஹன்ட் அமைப்பு நாடுமுழுவதும் 50 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் சேகரித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் மஹிந்த ராஜபக்ஸவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இதன்போது, அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களைத் தாம் முன்னெடுத்துச் செல்வதாகவும், ஜனாதிபதியும் செயலாளர்களும் தம்முடன் உள்ளதாகவும் அதற்கமைய செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

தற்போது பிரதமர் ஒருவர் இல்லாத நிலையில், அரசாங்கம் எவ்வாறு முன்நோக்கி பயணிக்கும் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஸ,

“பிரதமர் உள்ளார். பதவி காணப்படுகின்றது. அமைச்சர்களும் உள்ளனர். அவர்களுக்கான பதவிகளும் காணப்படுகின்றன. எனினும், சேவையாற்ற முடியாது. அந்த தீர்மானத்தை முற்றாக எதிர்க்கின்றோம்.

உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளோம். எனக் குறிப்பிட்டார். மேலும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தேர்தல் அவசியம் என நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் எண்ணுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு பயப்படுவதாகவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உரிய நேரத்தில் நிரூபிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.