தமிழகத்தையும் தமிழரின் வரலாற்றையும் சிதைத்து ஆரிய பண்பாட்டை புகுத்த நினைக்கும் பாசிச ஆரியத்தை எதிர்க்க பெரியார் உணர்வாளர்கள் அனைவரும் கட்சி இயக்கங்களை மறந்து ஒற்றுமையாய் டிசம்பர் 23 அன்று திருச்சியில் நடைபெற இருக்கிற கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழன உரிமை மீட்பு மாநாட்டிற்கு வருமாறு மே 17 இயக்கம் அன்போடு அழைக்கிறது.
நீங்கள் எந்த இயக்கமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது இயக்கங்களில் இல்லாத தனி உணர்வாளர்களாக இருக்கலாம். ஆரிய ஆதிக்கத்தை, சாதி அரசியலை, பெண்ணடிமை கருத்தியலை உடைத்திட, தமிழின உரிமை மீட்டிட, கருப்பு சட்டை அணிந்து டிசம்பர் 23 திருச்சிக்கு வருமாறு கருச்சட்டை பேரணியின் அழைத்து நிற்கின்றனர்.
அதுமட்டுமன்றி இந்த மாநாட்டிற்கான நன்கொடை அளித்திட வேண்டுமென பெரியோர் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கையினை முன்வைத்திருப்பதுடன், வங்கிக்கணக்கு இலக்கத்தினையும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.