நீலகிரி ஒரு சிறந்த சுற்றுலா தளங்களைக் கொண்ட மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அவ்வப்போது இருக்கும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பதாலும், உல்லாசப் பிரியர்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது.
இந்த மாவட்டத்தில் உள்ள ஊட்டி ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, நேரு பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் தொட்டபெட்டா, லேம்ஸ்ராக், டால்பினநோஸ், கோட நாடு போன்ற காட்சி முனைகள், படகு இல்லம், கேத்தரின் நீர்விழ்ச்சி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.