செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர்

கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் டீசர்

1 minutes read

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த சிவி குமார், மாயவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தபடியாக கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேங்க்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டார். 1.31 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டீசர், ஆசைக்கும் தேவைக்கும் நடுவில் இருப்பது ஒரு சின்ன கோடு அது ஆசை தேவையாக மாறும் போது நடக்கும் வன்முறையும், அதற்கான போராட்டமும் தான் கதை என புரிய வைக்கிறது.

பிரியங்கா ருத் தான் பிரதான ரோலில் நடித்திருக்கிறார். என் பசிக்கு இன்னொருத்தன் சாப்பிட முடியாது, எனக்கு ஏதாவதுன்னா நான் தான் கேட்கணும் போன்ற தெறிக்கும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. டீசர் முழுக்க வன்முறை, ரத்தம் தெறிக்கும் விஷயங்கள் அதிகமாக உள்ளன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.