உங்கள் சுவையை தூண்டும் தக்காளி தோசை சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தக்காளி தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
குறிப்பு
உங்களை சுவைக்கும் தூண்டும் கமகமக்கும் தமிழ்நாடு சமையல் உணவுகள்.காலை உணவு மற்றும் மதிய உணவு இரவு உணவு மற்ற சில உணவுகள்.செய்ய முதலில் தேவையான பொருட்கள் தூயமையாக இருப்பது நல்லது.காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும்.சமையலில் எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கும்.
உணவு செய்முறை : தக்காளி தோசை
-
Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, தக்காளி போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
-
Step 2.
பின் மிக்ஸியில் ஊற வைத்தவற்றை போட்டு உப்பு, பெருங்காயத் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
-
Step 3.
பின் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு எண்ணெய் தடவி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் முழுவதும் பரவலாக ஊற்றவும். பிறகு தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது
-
Step 4.
மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான தக்காளி தோசை தயார்.
நன்றி : அறுசுவை சமையல்
